முன்னாள் எம்பி சந்திரகுமாருக்கும் கனட தூதுவருக்கும் இடையில் சந்திப்பு - THAMILKINGDOM முன்னாள் எம்பி சந்திரகுமாருக்கும் கனட தூதுவருக்கும் இடையில் சந்திப்பு - THAMILKINGDOM
 • Latest News

  முன்னாள் எம்பி சந்திரகுமாருக்கும் கனட தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

  இலங்கைக்கான கனட தூதுவர் டேவிட் மக்னொன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவ ருமான முருகேசு சந்திரகுமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

  இச் சந்திப்பு இன்று (06) காலை எட்டு மணியளவில் நடைபெற்றுள்ளது. இதன் போது சமகால மற்றும் எதிர் கால அரசியல் நிலைமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதோடு. உயிர் த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்ன ரான நாட்டின் நிலைமைகள் பற்றியும் கலந்துரையாடியதாகவும், முக்கிய மாக வடக்கில் முதலீடுகளை மேற்கொள்வதன் ஊடாக தொழில் வாய்ப்புக் களை ஏற்படுத்திக்கொள்வது பற்றியும் பேசியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

   கனடா தூதுவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்....

  நான் கிளிநொச்சியில் நிற்பதில் மட்டும் மகிழ்ச்சியடையவில்லை பல நாடு களின் பிரச்சினைகளை அறிந்து கொண்டவன். அந்த வகையில் வடக்கில் மேலோங்கியுள்ள பிரச்சினைகளையும் புரிந்துள்ளேன். யுத்தத்தின் பின்னரான அரசியல் பொருளாதார நிலைமைகள் தொடர்பிலும் அறிந்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளாா். 

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: முன்னாள் எம்பி சந்திரகுமாருக்கும் கனட தூதுவருக்கும் இடையில் சந்திப்பு Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top