Breaking News

தமிழ்நாடு மௌனம் காக்கக் கூடாது - அடைக்கலநாதன்

தமிழ்நாடு மௌனம் காக்குமாக இருந்தால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்வது கடினம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளாா். 

தமிழ் மக்கள் தமது காணாமல்போன உறவினர்களுக்கு என்ன நேர்ந்தது, அரசியல் கைதிகளின் விடுதலை உள் ளிட்ட பல்வேறு தமிழர் பிரச்சினை களுக்காகப் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், பௌத்த தேரர்க ளின் போராட்டங்கள் மாத்திரம் கருத் திலெடுக்கப்படுகின்றன.

எதிர்காலத்திலும் தேரர்கள் அரசியல்சார் விடயங்களில் ஈடுபடலாம் என்ற கருத்தையே வெளிப்படுத்துகின்றது. எனவே அரசியல் தலைவர்கள் தமிழர்கள் பிரச்சினைகள் தொடர்பான தீர்வு விடயத்தில் காலத்தைக் கடத்துகின்றார்கள் என்பதை ஏற்க வேண்டும்.

தமிழ் மக்களின் போராட்டங்கள் பிசுபிசுத்துப் போகும் நிலையை அடையும் வரை தொடர்ந்து அமைதிகாக்க முடியாது. தமிழ் மக்களின் அரசியல் பிரச் சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுத்தருவதற்கு இந்தியா உறு துணையாக இருக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது வலியுறுத்தியிருந்தோம்.

இந்தியா எமக்கு மிக நெருங்கிய அயல்நாடு என்ற வகையில் இவ்விடயத்தில் உதவ வேண்டும். அதுவும் எம்மைக் கைவிடுமாக இருந்தால் இந்தியா ஏமாற்றி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதேபோன்று கடந்த காலங்கைப் போலன்றி இந்தியாவின் தமிழகத்தைக் கையாள்வதில் அண்மைக்காலங்களில் ஒரு தொய்வை ஏற்படுத்தி விட்டோம். தமிழ்நாடு மௌனம் காக்குமாக இருந்தால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்வது கடினமான விடயமாகவே அமையும்.