மரண தண்டனையை நிறைவேற்றினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - பிரிட்டன் - THAMILKINGDOM மரண தண்டனையை நிறைவேற்றினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - பிரிட்டன் - THAMILKINGDOM
 • Latest News

  மரண தண்டனையை நிறைவேற்றினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - பிரிட்டன்

  இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் உருவாகக்கூடிய கடும் விளைவுகள் குறித்து பிரிட்டன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங் கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் இலங்கையுடன் பயங்கர வாத தடுப்பு நடவடிக்கைகள் உட்பட சட்ட அமுலாக்கல் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பது சாத்தியமற்றதாகிவிடும் என பிரிட்டனின் வெளிவிவகார அலு வலகம் தெரிவித்துள்ளது.

  இலங்கைக்கு இது தொடர்பில் வழ ங்கிவந்த தொழில்நுட்ப உதவிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியி ருக்கும் எனவும் பிரிட்டன் தெரிவித் துள்ளது. மரணதண்டனையை நிறை வேற்றுவதில்லை என்ற தனது நீண்ட கால நிலைப்பாட்டை இலங்கை கை விட எண்ணியுள்ளது என்ற தகவல்க ளால் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகம் தெரிவித் துள்ளது.

  மரணதண்டனையை நிறைவேற்றுவதை அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரிட்டன் எதிர்க வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

  இலங்கை தனது நீண்டகால கொள்கையை கைவிடுவது பின்னோக்கிச் செல் லும் ஒரு நடவடிக்கையாக அமையும் எனவும் தெரிவித்துள்ள பிரிட்டன் இலங் கையின் சர்வதேச கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மரண தண்டனையை நிறைவேற்றினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - பிரிட்டன் Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top