தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இதுவே ! அவசரப்படத்தேவையில்லை சம்பந்தன் ! - THAMILKINGDOM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இதுவே ! அவசரப்படத்தேவையில்லை சம்பந்தன் ! - THAMILKINGDOM
 • Latest News

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இதுவே ! அவசரப்படத்தேவையில்லை சம்பந்தன் !

  "ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களை தெரிவிக்கட் டும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளாா். 

  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத் திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற் றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரி வித்த போதே மேற்கண்டவாறு தெரி வித்துள்ளாா்.

   மேலும் தெரிவிக்கையில்...,

  "ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன என்று சிலர் கேட்கின்றனர். நாம் இப்போது அவச ரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலில் போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பாளர்களை தெரிவிக்க வேண்டும்.

  யார், யார் போட்டியிடுகின்றனர் என்பதை ஆராய வேண்டும். அதன்பின்னர் அந்த வேட்பாளர்கள் தமது நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க வேண்டும். அதன்பின்னர் வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து மக்கள் நலன் சார்ந்து முடிவெக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளாா். 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு இதுவே ! அவசரப்படத்தேவையில்லை சம்பந்தன் ! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top