லண்டனில் மீண்டும் ஒரு தமிழ் குழந்தை கொலை! - THAMILKINGDOM லண்டனில் மீண்டும் ஒரு தமிழ் குழந்தை கொலை! - THAMILKINGDOM
 • Latest News

  லண்டனில் மீண்டும் ஒரு தமிழ் குழந்தை கொலை!

  லண்டனில இலங்கையை சேர்ந்த தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தியுள்ளார். இருவரையும் ஏர் அம்பூலன்ஸ் மூலம் மருத்துவர்கள் வைத்தியசாலை எடுத்துச் சென்றுள்ள நிலையில். மகள் சாயகி இறந்துவிட்டதாக அறியப்படுகிறது. 

  விடுதலைப் புலிகளின் கடல்படை பிரிவை சேர்ந்த தளபதியான, சுடர்ணன் என்பரின் அண்ணாவின் மனைவியே இவ்வாறு தனது பிள்ளையைக் கத்தியால் குத்தியுள்ளார் என்றும். மன அழுத்தமே இதற்கு காரணம் என்றும் சற்று முன்னர் அதிர்வு இணையம் அறிகிறது. இருப்பினும் பிள்ளை இறந்து விட்டதாகவும். தாய் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாகவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. லண்டனில் பல தமிழர்கள் மன அழுத்தத்தில் உள்ளார்கள். ஆனால் இதனை வெளியே சொல்ல எவரும் தயாரா இல்லை. 

  குடும்பத்தினரும் அதனை மூடி மறைப்பதால் தான் இது போன்ற கொலை சம்பவங்களில் இவை போய் முடிகிறது. எனவே இனியாவது இப்படி பட்ட கொலைகள் லண்டனில் நடக்க கூடாது. சிறிய அளவில் கூட மன அழுத்தத்தில் எவராவது பாதிக்கப்பட்டு இருந்தால். உடனே மருத்துவரை நாடுவது நல்லது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: லண்டனில் மீண்டும் ஒரு தமிழ் குழந்தை கொலை! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top