Breaking News

நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவரின் விபரம்

லங்காபுர பிரதேச செயலகத்தில் இனங்காணப்பட்ட புதிய கொரோனா தொற்றாளரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (31) உறுதிப்படுத்தப்பட்டதாக அனுராதபுர மாவட்ட தொற்று நோய் நிபுணர் வைத்தியர் பீ.சஞ்சய தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2815 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், 2391 பேர் இதுவரையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 413 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, பொலன்னறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் நெருங்கி பழகிய 158 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆம் இரவு பி.சீ.ஆர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட 158 பேரின் குறித்த முடிவுகள் அறிக்கை நேற்று இரவு கிடைக்கப்பெற்ற நிலையில், குறித்த அறிக்கையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அனுராதபுர மாவட்ட தொற்று நோய் நிபுணர், வைத்தியர் பீ.சஞ்சய தெரிவித்தார்.

பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தரப்பினர்களுக்கு இடையில், பிரதேச செயலக உறுப்பினர்கள், பிரதேசவாசிகள், தொற்றாளரின் உறவினர்கள் போன்று பொலிஸ் அதிகாரிகள் சிலரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.