கும்ப ராசியை நேசிப்பதற்கு 7 காரணங்கள்; பரந்த இதயம் கொண்ட பாசமிக்கவர்கள் - THAMILKINGDOM கும்ப ராசியை நேசிப்பதற்கு 7 காரணங்கள்; பரந்த இதயம் கொண்ட பாசமிக்கவர்கள் - THAMILKINGDOM
 • Latest News

  கும்ப ராசியை நேசிப்பதற்கு 7 காரணங்கள்; பரந்த இதயம் கொண்ட பாசமிக்கவர்கள்

  கும்பம் ஒரு காற்று ராசி, நீருடன் கூடிய கலசத்தை சுமந்து நிற்கும் மனிதன் தான் கும்ப ராசியின் சின்னமாகும். நீங்கள் சந்தித்த மனிதர்களில் கும்ப ராசிக்காரர்கள் விசித்திரமானவர்கள். முதலில் அவர்கள் வெட்கப்படக் கூடியவர்களாகவும் கனிவாகவும் இருப்பர், பிறகு காலம் செல்லச் செல்ல பாசம், அதீத கட்டுப்பாடுகள் போன்ற தங்களது தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பங்களை வெளிப்படுத்துவர். இவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர்கள் ஆர்வமிக்க புத்திசாலித்தனத்துடன் ஆட்கொள்பவர்கள்.  ​

  உண்மையை பேசுவார்கள் ​

  உங்களுக்கு சங்கடமாக இருந்தால் கூட அவர்கள் உண்மையை மட்டுமே பேச விரும்புவார்கள். ஆனால் மற்றவர்களை வேண்டுமென்றே காயப்படுத்த நினைக்க மாட்டார்கள். தாங்கள் அக்கறை காட்டும் மனிதர்களிடம் உண்மையாக இருப்பதையே விரும்புவார்கள். பெண் ​

  களிடம் ரகசியம் தங்காதது ஏன் தெரியுமா? - மகாபாரதத்திலிருந்து வந்தது தெரியுமா? முழுமையான உண்மையான காதலை நீங்கள் தேடும்போது கும்ப ராசிக்காரர்களை கண்டறிவீர்கள். இந்த அற்புதமான மனிதர்கள் முதலில் இயல்பான வெட்கப்படும் தன்மை கொண்டவர்கள், அந்த இயல்பு அவர்களிடம் நீங்கள் பேசுவதை தடை செய்யாது. ஏனென்றால் அவர்கள் எளிமையாக அணுகக் கூடியவர்கள். மற்ற எல்லாவற்றையும் விட உண்மையை விரும்புவார்கள், அந்த உண்மை உங்களிடம் இருந்தால் நாளாக ஆக உங்கள் மீது பாசம் அதிகரிக்கும்.  ​

  உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமம்  ​

  கும்ப ராசிக்காரர்கள் சிறந்த பேச்சாளர்கள். இவர்கள் எதைப்பற்றி பேசினாலும் மிகவும் உணர்ச்சிகரமாகவும் தீர்க்கமாகவும் தினசரி வாழ்விலிருந்து கவனத்தை திசை திருப்பும் விதமாகவும் பேசுவார்கள். இவர்கள் சிறந்த படைப்பாற்றல் உள்ளவர்களாகவும் தவிர திறன் மிகுந்த கற்பனையாளர்களாகவும் இருப்பார்கள்.  ​

  தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இவர்கள் சிரமப்படுவார்கள், பரஸ்பரம் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் உணரும் வேளையில் தங்களது காதலை வெளிப்படுத்த கச்சிதமான நேரம் என கும்ப ராசிக்காரர்கள் கருதுகிறார்கள். கும்ப ராசிக்காரர்களை காதலிப்பதற்கான 7 காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.  ​

  ​பரந்த இதயம் கொண்டவர்கள் ​

  ஆழ்நிலையில் புதிரான ஆளுமைகள், கும்ப ராசிக்காரர்கள் பரந்த இதயத்தையும் பெருந்தன்மையும் கொண்டவர்கள். எப்பொழுது உதவி செய்ய நினைக்கிறார்களோ அப்போது அவர்களது சேவை மனப்பாங்கு அவர்களை தன்னார்வலர்களாகவும் சேவைக்காக நன்கொடை அளிக்கவும் செய்யும்.  ​

  கும்ப ராசிக்காரர்கள் நடப்பு விஷயங்களை சரியாய் தெரிந்து வைத்திருப்பார்கள். மேலும் பார்வையில் படும் எவருக்கும் உதவி செய்வார்கள். வல்லமை இல்லை என வெளிப்படையாகத் தெரிந்தாலும் உலகை சிறப்பானதாக மாற்ற இயலும் என நம்புபவர்கள்.  ​

  ​கும்ப ராசிக்காரர்கள் புத்திசாலிகள்  ​

  ஆர்வமும் புத்திசாலித்தனமும் சமமான அளவுள்ளவர்கள், ஆர்வமுள்ள எதைப்பற்றியும் முடிவற்ற தொடராக கும்ப ராசிக்காரர்கள் கேள்விகளை எழுப்புவர். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதை இவர்கள் நேசிப்பர், இவர்களது உள்ளார்ந்த அறிவைக் கொண்டு உலகை வேறுவிதமாக காணக் கூடியவர்கள்.  ​

  இவர்களது கூச்ச சுபாவத்திற்கு எதிர்மாறாக ஆச்சரியப்படுத்தும் வகையில் இவர்கள் குழுவில் தலைமைப் பண்புகளை சிறப்பாக வெளிப்படுத்துவர். தொழில் உலகை தங்களது நிபுணத்துவம் கொண்டு சிறப்பாக செயல்படுத்துவர்.  ​

  ​இசையுடன் ஆழ்ந்த தொடர்பை கொண்டிருப்பவர்கள்  ​

  கும்ப ராசிக்காரர்கள் இசையுடனான தொடர்பில் மற்ற எவரும் உணராத ஒன்றை விரும்புவர். ஆன்மாவை வருடும் சந்தத்தில் ஆழ்ந்த காதல் கொண்டவர்கள். ஹிப் ஹாப் மற்றும் பாப் இசை அவர்களது உணர்வை மீட்கும் ஆனால் உற்சாக மற்றவர்கள்.  ​

  கும்ப ராசிக்காரர்களுடன் நீங்கள் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமானால் இசையை உபயோகித்து உங்களது வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். கூட்டுக்குள் இருந்து அவர்களை வெளிக்கொணருங்கள்.  ​

  ​தங்களது இணையை இவர்கள் முன்னிலைப்படுத்துவார்கள்  ​

  கும்ப ராசிக்காரர்கள் எதை விடவும் உங்களையே முன்னிலையில் வைப்பார்கள். தங்களது துணைக்கு முக்கியத்துவம் அளித்து மற்றவற்றை போகிற போக்கில் விட்டுச் செல்வார்கள். இவர்கள் அந்த நொடியில் மனதுக்கு தோன்றியபடி செயல்படுபவர்கள்.  ​

  உங்களை பார்க்க வேண்டுமென்று நினைத்து விட்டால் நள்ளிரவில் கூட கிளம்பி வந்து விடுவார்கள். அவர்களை பார்க்க வேண்டுமென்று நினைத்தால் நீங்கள் இருமுறை அழைக்கத் தேவையில்லை. நீங்கள் அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் இடத்துக்கு எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு ஓடி வருவார்கள்.  ​

  ​கலப்படமில்லாத உண்மையை கேட்க விரும்புவார்கள்  ​

  கும்ப ராசிக்காரர்களுக்கு நீங்கள் எப்போதும் உண்மையை தேன் தடவி கூற வேண்டியதில்லை. அவர்கள் முழுமையான, அருவருப்பான, மறைக்கப்படாத உண்மையை விரும்புகிறார்கள். அவர்களிடம் உண்மையை சொன்னதற்காகவே உங்களை அதிகமாக விரும்புவார்கள்.  ​

  பொய்யான வார்த்தைகளால் அவர்களை சமாதானப்படுத்த முயலாதீர்கள். ஒருமுறை உண்மையை கண்டுபிடித்து விட்டால் மிகுந்த கோபம் கொள்வார்கள். கும்ப ராசிக்காரர்கள் இயல்பானவர்கள், எனவே எதையும் அவர்களிடமிருந்து மறைக்காமல் இருந்தால் பாராட்டுவார்கள்.  ​

  வேடிக்கையானவர்கள்  ​

  கும்ப ராசிக்காரர்கள் அன்பானவர்கள், வேடிக்கையானவர்கள், விளையாட்டுத்தனமானவர்கள்.  ​

  கும்ப ராசிக்காரர்களுடன் நேரத்தை கழிப்பது மிகவும் அழகானதாகும். உங்களை வெதுவெதுப்பாய் அணைத்து உங்கள் மீதான காதலை வெளிப்படுத்துவார்கள். ஆழமாக வெம்மையாகவும் உங்களை காதலிப்பார்கள், நீங்கள் அவரை காதலிக்கும் போது மகிழ்ச்சி நிறையும். அவர்கள் வெளிப்படுத்திய அதே காதலை நீங்கள் வெளிப்படுத்துவீர்கள்.

  ஒருமுறை அவர்கள் உங்களிடம் சௌகரியமாக உணர்ந்தால், தயங்காமல் விளையாட்டுத்தனமான முட்டாள்தனமான பக்கங்களை வெளிப்படுத்துவர். அவர்கள் சில சமயம் சலிப்பூட்டும் காதலர்களாக இருந்தாலும், இறுதியில் நேசிக்கத்தக்கவர்களாகவும் சுற்றுப்புறத்தை வேடிக்கையாகவும் மாற்றுவார்கள்.  ​

  ​அவர்கள் போலியானவர்கள் அல்ல  ​

  கும்ப ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். ஒரு கட்டத்தில் கும்ப ராசிக்காரர்கள் உங்களை நேசிப்பதை நிறுத்தி விட்டார்களோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அவர்கள் உங்களை ஆழமாக உண்மையாக நேசித்திருந்தால் மட்டுமே உங்கள் மீது ஆர்வம் காட்டி இருப்பார்கள்.  ​

  ராவணனின் சகோதரன் குபேரன் எப்படி செல்வங்களின் அதிபதி ஆனார்? - சிவனின் அருளைப் பெற்றது எப்படி? எனவே அவர்கள் உங்களை வெறுக்க வாய்ப்பே இல்லை. அவர்கள் தங்களது இணையுடைய எல்லா பண்புகளோடும் அவர்களை விரும்புவார்கள், ஒன்றாக இருக்கும் போது அவர்களை அவர்களாகவே இருக்கும்படி ஊக்குவிப்பார்கள்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கும்ப ராசியை நேசிப்பதற்கு 7 காரணங்கள்; பரந்த இதயம் கொண்ட பாசமிக்கவர்கள் Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top