லீக்கான மாஸ்டர் படத்தின் கதை! அரைத்த மாவையே அரைத்து வைத்துள்ள லோகேஷ் கனகராஜ்! - THAMILKINGDOM லீக்கான மாஸ்டர் படத்தின் கதை! அரைத்த மாவையே அரைத்து வைத்துள்ள லோகேஷ் கனகராஜ்! - THAMILKINGDOM
 • Latest News

  லீக்கான மாஸ்டர் படத்தின் கதை! அரைத்த மாவையே அரைத்து வைத்துள்ள லோகேஷ் கனகராஜ்!

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா சாந்தனு போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர காத்துக்கொண்டிருக்கும் படம் மாஸ்டர். 

  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் கதை லீக்கான சம்பவம் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அரபு நாடுகளில் மாஸ்டர் படம் விற்கப்பட்டுள்ளது, அப்பொழுது படத்தின் கதை சுருக்கம் வெளிவந்துள்ளது. 

  மாஸ்டர் படத்தின் கதை என்னவென்றால் போதைப்பொருளுக்கு அடிமையான சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு வாத்தியாராக தளபதி விஜய் 3 மாதங்களுக்கு அனுமதிக்கப்படுகிறார். அந்தப் பள்ளியின் முழுப் பொறுப்பில் விஜய்சேதுபதி உள்ளார். பள்ளியில் இருக்கும் மாணவர்களை தவறாக பயன்படுத்துகிறார் விஜய் சேதுபதி. இதனால் தளபதி மற்றும் விஜய்சேதுபதிக்கு இடையே பெரும் கலவரம் உண்டாகிறது. முரட்டுத்தனமான வில்லன் கதாபாத்திரத்தில் இருக்கும் விஜய் சேதுபதியை எப்படி தளபதி விஜய் அடக்குகிறார் என்பதுதான் கதையாம்.  

  அதுமட்டுமில்லாமல் 180 நிமிடங்கள், இந்த படத்தின் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த மாஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பு தற்போது தளபதியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.  

  என்னதான் கதை வெளியே வந்தாலும் தளபதியை திரையில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மொத்தத்தில் விஜய், விஜய்சேதுபதி ஆடுபுலி ஆட்டம் போடுவது போல தான் உள்ளது, இதே கதை பலமுறை தமிழ் சினிமாவில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: லீக்கான மாஸ்டர் படத்தின் கதை! அரைத்த மாவையே அரைத்து வைத்துள்ள லோகேஷ் கனகராஜ்! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top