Breaking News

நாடு முழுவதும் அபாயமுள்ள பகுதியாக அறிவிப்பு!

இலங்கை முழுவதும் கொரோனா தொற்று பரவக்கூடிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

ஆகவே சுகாதார சட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு பொதுமக்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோஹண கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மாத்திரமல்ல, எந்த பிரதேசத்தை சேர்ந்த மக்களாக இருந்தாலும் தற்போதைய நிலைமையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைக்கு அமைய செயற்படுவது முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 13 பொலிஸ் பிரிவுகள் மற்றும் வெல்லம்பிட்டிய, மட்டக்குளி, அட்டலுகம, அலவத்துகொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.