சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள் - THAMILKINGDOM சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள் - THAMILKINGDOM
 • Latest News

  சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்


  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதற்கு பின் சீரியலில் நடிக்க துவங்கிய அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.  சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் அவர் நேற்று தங்கியிருந்த நிலையில் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. 28 வயதில் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்தது ஏன் என ரகிகர்கள் உருக்கமாக கேட்டு வருகிறார்கள்.

  அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன் தான் சித்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஹேமந்த் ரவி என்ற தொழிலதிபரை தான் அவரது பெற்றோர் பார்த்து சித்ராவிற்கு மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்து இருந்தனர். விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் சித்ரா பங்கேற்ற போது அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஹேமந்தை வரவைத்து அவரை ப்ரொபோஸ் செய்ய வைத்தனர். அதனை பற்றி சித்ராவும் இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  விரைவில் அவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் தற்போது தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்திருக்கிறார். அதற்கான உண்மையான காரணம் என்ன என்பது போலீஸ் விசாரனையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சித்ராவின் திடீர் தற்கொலை அவரது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்து உள்ள நிலையில் பலரும் அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றன. #vjchithra என்ற ஹாஷ் டேக்கில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அவரது மரணம் பற்றிய செய்தி நம்பவே முடியாத ஒன்று என தெரிவித்து வருகிறார்கள்.

  சித்ரா அதிகம் கஷ்டப்பட்டு தான் சின்னத்திரையில் முக்கிய நடிகையாக வளர்ந்திருக்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக கெரியரை தொடங்கிய அவர் Discovery Channel தவிர மற்ற எல்லா சேனல்களிலும் பணியாற்றிவிட்டார் என பலரும் அவரை கலாய்ப்பது உண்டு. இப்படி அதிகம் கஷ்டப்பட்டு தான் அவர் அடுத்தடுத்த லெவலுக்கு வந்து கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சித்ராவின் தற்கொலை பலரையும் கலக்கமடைய வைத்துள்ளது.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள் Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top