Breaking News

அம்பலமான யாழ் மாநகர மோசடிகள்

தென்னிலங்கை விளம்பரதாரர் நிறுவனம் 
ஒன்றிற்கு யாழ் மாநகர எல்லைப் பகுதிக்குள் சபையின் அனுமதி இன்றி "கன்றி போட்' அமைக்க மாநகர முதல்வர் தன்னிச்சையாக அனுமதிப்பதைத் தடுப் பது தொடர்பில் கொண்டு வரப்பட்ட பிரேரணை கடந்த வியாழனன்று யாழ் மாநகர சபையில் 3 மணி நேரம் கடும் சர்ச்சையை உண்டு பண்ணியது. 

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டின் 8 ஆவது மாதாந்த கூட்டம் 2021-08-19 அன்று சபை முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றபோதே இது இடம்பெற்றது. இந்த விடயம் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணும் என்பதனை அறிந்த ஈ.பி.டி.பியும் சபை நடவடிக்கைகளை புறக்கணித்தது. "கன்றி போட்' மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் அமைப்பதற்காக தென்னிலங்கையைச் சேர்ந்த ரெம் சொலூசன் என்னும் நிறுவனத்தை 2021-07-31 அன்று முன்னிரவு நேரம் மாநகர முதல்வர் நேரில் அழைத்து வந்து, பலாலி வீதியில் இடம் காண்பித்துச் செல்லும் வரையில் சபை உறுப்பினர்கள் இந்த விடயத்தை அறிந்திருக்கவில்லை. 

விளம்பர வளைவு அமையும் வட்டார உறுப்பினர்களிற்கே அது தெரிந்திருக்கவில்லை. தென்னிலங்கை நிறுவனம் ஒன்றிற்கு சபையில் பிறிதொரு விடயத்திற்கு பெற்ற ஒப்புதலை, இந்த விடயத்துக்குக் கபடமாகக் காண்பித்து, அந்த விளம்பர பலகை நாட்டும் வேலையை மாநகர முதல்வர் இரகசியமாக அனுமதித்தார் என்ற விவகா ரம் கசிந்தமையை அடுத்து விடயம் சூடு கண்டது. 

ஜூலை 31ஆம் திகதி பரமேஸ்வராச் சந்தியில் காதும் காதும் வைத்தாற்போல, சத்தம் சந்தடி ஆரவாரமின்றி, வளைவு நாட்ட இரகசியமாகமுற்பட்ட சமயம் சில மாநகர சபை உறுப்பினர்களினாலும் அயல் காணி உரிமையாளர்களினாலும் அது தடுக்கப்பட்டது. இதனை அடுத்து, இவ்விடயத்தில், மேயரின் ஏற்பாட்டில் சபையின் வேலைப் பகுதிக் குழுவான (மராமத்து குழு) "சுத்து மாத்து' குழுவாகச் செயல்பட்டது. மறுநாள் ப.தர்சானந் (யாழ்.மாநகர சபை உறுப்பினர்) திகதிய கடிதம் மூலம் வளைவு அமைக்க ரெம் சொலுசன் நிறுவனத்தை மாநகர சபை தேர்வு செய்துள்ளதனால் அதற்கான அனுமதியை வழங்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எழுத்து மூலம் பரிந்துரைத்துள்ளார். ( கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) 


மாநகர முதல் வரின் கோரிக்கையின் பெயரிலேயே வீதி அபிவிருத்தி அதிகார சபை தனது நடவடிக்கையில் இறங்கியது. இதற்கமைய ரெம் சொலூசன் நிறுவ னம் வளைவு அமைக்க விரும்பிய வீதிகளைக் கேட்டறிந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை, அவற்றை அமைப்பதானால் நிறைவேற்ற வேண்டிய பணிகளாக 13 விடயங்களைப் பட்டியலிட்டு ஓர் அறிவுறுத்தல் கடிதத்தை 2021-07-21அன்று வழங்கியுள்ளது.  

முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை விடு முறை தினம். அத்தினத்தில், தொலை பேசியில் விதிமுறைக்கு முரணாகத் தகவல் வழங்கி, 2ஆம் திகதி இந்த மரா மத்து குழுவைக் கூட்டி, இந்த அமைப்பு வேலைகளுக்கு ஒப்புதல் வழங்கினர். இக்கூட்டத்துக்கான அறிவித்தல் தவறானது என்பதனால் எமது உறுப்பினர் எம். எம். நிபாகிர் குழுக் கூட்டத்திற்கு சமுகமளிக்கவில்லை. 

அதன் பின்பு 5ஆம் திகதி முதல் இது வரை 3 தடவை சபையின் திட்டமிடல் குழுவிற்கு இவ்விடயம் எடுக்கப்பட்டு, 12ஆம் திகதி சபையின் நிதிக் குழுவிலும், அவசர அவசரமாக எடுத்து ஒப்புதல் பெற முயற்சிக்கப்பட்டது. இந்த விளம்பர வளைவு அமைக்க இதுவரை சபை அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கும் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் 2021-05-19ஆம் திகதி இவ்வாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையால் வழங்கப்பட்ட கடிதம் சிங்கள மொழியில் இருந்ததனைப் பயன்படுத்தி அது ஓர் அனுமதிக் கடிதமாக ஏமாற்றிக் காட்டப்பட்டுள்ளது. 

இதேநேரம் வீதி அபிவிருத்தி அதிகார சபையான ஓர் அரச திணைக்களத்திற்கு யாழ். மாநகர சபையினதும் மாநகர முதல்வரின் றப்பர் முத்திரையான அரச சொத்தையும் பயன்படுத்தி வளைவை அமைக்கும் தென்னிலங்கையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு 50 வீதக் கழிவு வழங்குமாறு கடிதம் வழங்கி, அதிகார துஷ்பிரயோகத்தில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் ஈடுபட்டார் எனக் கூட்டமைப்பு உறுப்பினர்களால் சபையில் சுட்டிக்காட்டப்பட்டது. இது ஓர் முறைகேடாக பல சந்தேகத்தை ஏற்படுத்துவதான சர்சையாகவும் அமைந்தது. 

இதே நேரம் இந்த கன்றிபோட் எனப்படும் விளம்பரப் பதாகை அமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு மட்டும் 55 லட்சத்து 600 ரூபாவுடன் வருட வாட கையும் வழங்கப்பட வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை நிபந்தனை விதிக்கும் அதே நேரம், மாநகர சபைக்கு ஒரு பதாகைக்கு ஆண்டிற்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் ரூபா மட்டும்தான் கிடைக்கும் என்பது மாநகர முதல்வரின் கூற்று உறுதி செய்கின்றது . 

இந்த ஒரு லட்சத்து 92 ஆயிரம் ரூபா வருமானத்தை ஈட்ட சபை வாகனம், அதிகாரிகள், ஊழியர்கள் எனப் பலர் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தச் செய்வதற்கு அலைந்து திரிகின்றனர். இதற்கு இதுவரை எத்தனை லட்சம் ரூபா செலவு ஏற்பட்டது என சபையில் சக உறுப்பினர் ந.லோகதயாளனால் கேள் வியாகவும் எழுப்பப்பட்டது. 

மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் கொட் டகையில் வசிப்பவர்கள் வீடு அமைக்க அல்லது ஓர் மதில் கட்ட அனுமதிக்குச் சென்றால் காணி உறுதி, தோம்பு, காணி வரைபடம், கட்டட வரைபடம், சோலை வரி, நகர அபிவிருத்தி அதிகார சபை அனுமதி, விண்ணப்பம் இருக்கின்றதா என்று கேட்டு எது இல்லை என்றாலும் அவற்றை எடுக்கும் வரை அலைக்கழிப்புத் தான் இடம்பெறுகின்றது. அதற்காக உரியவர் மாதக் கணக்கில் அலைய வேண்டும். 

இதுவரை ஒரு குடும்பத்தையேனும்யாழ் நகரின் பல பகுதியிலும் வீதியோர மின்கம்பங்களூடாக 11 ஆயிரம் கிலோ வாட்ஸ் மின்சாரம் செல்கின்றது. அதில் பலாலி வீதி முழுமையாகவும் தற்போது 11 ஆயிரம் கிலோ வாட்ஸ் மின்சாரமும் செம்மணி வீதியில் 33 ஆயிரம் கிலோ வாட்ஸ் மின்சாரமும் வருகின்றது. ஏதே னும் கட்டுமானம் அமைப்பதாயின் 11 ஆயிரம் கிலோ வாட்ஸ் மின்சாரம் வரும் வீதியில் கீழாக 2.7 மீற்றர் இடை வெளியும் கிடையாக எனில் 1.5 மீற்றரும், 33 ஆயிரம் கிலோ வாட்ஸ் மின்சாரம் வரும் வீதி யில் 3.3 மீற்றர் இடைவெளியும் இருக்க வேண்டும் என இ.மி.சபை தெரிவிப்பதனை ஓர் உறுப்பினர் எழுத்தில் கோரிப் பெற்று சபையில் சமர்ப்பித்திருக்கின்றார். 

ஆனால் அந்த விதிமுறைகளை எல்லாம் உதாசீனம் செய்து, அவற்றை மீறி, தனிப்பட்ட அக்கறை காட்டி, ஒரு தென்னிலங்கை நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியே தீருவேன் என முதல்வர் அடம் பிடிப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. எனவே இதனை இடைநிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தே ஓர் உறுப்பினரால் அந்தப் பிரேரணை முன்மொழியப்பட்டது. இதிலே நிறுவனம் அனுமதி கோரும் வீதிகளில் பருத்தித்துறை வீதியும் ஒன்று. பருத்தித்துறை வீதி தொடர்பில் மாநகர சபையின் சொத்துப் பதிவேட்டின் பிரகாரம் பருத்தித்துறை வீதி ஆரம்பம் முதல் 3.67 கிலோ மீற்றர் தூரம் - அதாவது வேம்படிச் சந்தி முதல் கல்வியங்காட்டுச் சந்திவரை - எனத் தெளிவாகத் தெரிவிக்கின்றது. ஆனால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நாட்டப்படும் கிலோ மீற்றர் கல்லில் 4 ஆவது கிலோ மீற்றர் கல் சட்டநாதர் கோவிலடியில் உண்டு. 

இவ்வாறான நிலையில் இத்தனை சர்ச்சைகளையும் எமது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக உறுப்பின ரான ந.லோகதயாளன் எழுப்பியதன் பெயரில் இந்த விடயம் தற்போது தற்காலிக மாக நிறுத்தப்பட்டு, இவை தொடர்பில் ஆராய்ந்து இடங்களை நேரில் பார்வையிட்டு, சபைக்கு அறிக்கையிட 5 உறுப்பினர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தமது பரிந்துரையை மீண்டும் சபைக்குச் சமர்ப்பிக்கும். அவ்வாறு சமர்ப் பிக்கும் அறிக்கையின் பிரகாரம் சபை இறுதி முடிவினை எட்டும் என முடிவாகி யது. 

மக்களிற்கான நீதியான, நியாயமான விடயத்தை எவர் செய்தாலும் ஆதரிக்க லாம். அதுவே மாறாக இருந்தால் எவராயினும் முன் நின்று எதிர்க்க வேண்டும் என் பதில் நாம் திடமாகவுள்ளோம். இதேநேரம் அரச திணைக்கள கடித தலைப்பை பயன்படுத்தி வரிச் சலுகை வழங்க சிபார்சு செய்த தான விடயம் சார்பில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண ஆளுநர் ஏன் இதுவரை மெளனம் காக்கின்றனர் என்பதும் புரியவில்லை. இதே நேரம் யாழ். நகரில் ஓர் முதலீட்டின் மூலம் வருமானத்தை ஈட்ட தென்னிலங்கை நிறுவனம் ஒன்றை ஊக்குவிக்கப் படுவதிலும் பார்க்க, மாநகர வர்த்தகர்கள் அல்லது மாவட்ட வர்த்தகர் அல்லது மாகாண முதலீட்டாளர்கள் யாரோ ஒருவருக்கு வழங்கி அதனை ஊக்குவிக்கலாம். மாறாக தேசியம் என வாயால் கூறிக்கொண்டு தென்னிலங்கை முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வேண்டியதன் பின்னால் புதைந்து கிடக்கும் மர்மத்தை - நோக்கத்தை - மாநகர வரியிறுப்பாளர்களே இலகுவாக புரிந்து கொள்வார்கள்.




மணிவண்ணனிற்கு முதல் மன்னிப்பு -டக்ளஸ் அறிவிப்பு 

முன்னணி உறுப்பினரை ஈ.பி.டி.பி ஆதரவுடன் வெளியேற்றினார் மணி