Breaking News

கார்த்திகை தீப நாளில் பழைய விளக்குகளை ஏற்றலாமா?

 


கார்த்திகை தீபம் அன்று ஏற்றக் கூடிய விளக்குகளில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. பழைய விளக்குகளை ஏற்றலாமா? கூடாதா? அப்படி புதிய விளக்குகள் வாங்கினால் எவ்வளவு வாங்க வேண்டும். வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் விளக்கு ஏற்றினால் நல்லது என பலவிதமான சந்தேகங்கள் உள்ளன.. வாங்க அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.

கார்த்திகை தீபம் என்பது சிவபெருமானின் ஜோதி வடிவத்தை வழிபடுவதே ஆகும். நெருப்பு ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையில் விசேஷமாக கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அது போல் வீடுகளிலும் நாம் கார்த்திகை தீபம் அன்று நிறைய விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். அவ்வாற்று ஏற்றும் விளக்குகள் புதியதாக இருக்க வேண்டுமா? அல்லது பழைய விளக்குகளையே ஏற்றலாமா? என்ற கேள்வி நம் அனைவருக்கும் இருக்கிறது. 

கார்த்திகை தீபம் அன்று ஏற்றக்கூடிய அகல் விளக்குகள் புத்தம் புதியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே நீங்கள் ஏற்றிய விளக்குகளை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கில் விரிசல்கள் இருந்தால் அதனை தூக்கி எறிந்து விடுங்கள். விரிசல் இல்லாமல், உடையாத நல்ல அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவதே நல்லது.  ஒவ்வொரு கார்த்திகை தீபம் அன்று தலைவாசலில் ஏற்றக்கூடிய இரண்டு விளக்குகள் மட்டும் புதிதாக இருப்பது மிகவும் நல்லது. மற்ற விளக்குகள் பழையதாக இருக்கலாம் தவறில்லை என்று ஆச்சாரிய்யார்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா: 5 ஆம் நாள் உற்சவம்

கார்த்திகை தீப திருநாள்: வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?

 எப்படி கார்த்திகை தீபம் ஏற்றுவது?

சுத்தம் செய்து தயாராக இருக்கும் அகல் விளக்குகளை மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய் அல்லது நெய் தவிர வேறு எண்ணெய்களை உபயோகப்படுத்த வேண்டாம். நம்முடைய வருடத்தில் ஒரு நாள் தான் இந்த தீபங்களை ஏற்ற போகிறோம். நம்முடைய உண்மையான பக்தியை முன் வைத்து வேண்டுதல்கள் வைத்தால் நிச்சயம் அது பலிக்கும் என்பது நம்பிக்கை.

கார்த்திகையின் சிறப்பு என்ன?

விளக்குகளில் கணமான திரிகளைப் போட்டு முதலில் ஒரு தீபத்தில் தீக்குச்சியால் ஏற்றி வைத்து விட்டு பின்னர் மற்ற தீபங்களை அந்த முதல் தீபத்தில் ஒளிரும் ஜோதியில் இருந்து ஏற்றி வர வேண்டும். எல்லா தீபங்களும் தீக்குச்சியை பயன்படுத்தி ஏற்றாதீர்கள். ஒரு தீபத்திலிருந்து மற்ற தீபங்களை ஏற்றுவது தான் கார்த்திகை தீபத்தின் சிறப்பம்சம் ஆகும்.