எரிபொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கொத்மலை தவலந்தென்ன நகரத்தில் தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.