புஷ்பா-2 படத்தில் வில்லியாக களம் இறங்கும் பிரபல நடிகை! - THAMILKINGDOM புஷ்பா-2 படத்தில் வில்லியாக களம் இறங்கும் பிரபல நடிகை! - THAMILKINGDOM

 • Latest News

  புஷ்பா-2 படத்தில் வில்லியாக களம் இறங்கும் பிரபல நடிகை!

   
  தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து தமிழில் மசாலா படங்களிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை விட்டு விலகி தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். 

  பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்த பிரியாமணி, அதன் மூலம் நிறைய வருமானமும் பிற படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது.

   பிரியாமணி நடிகர்கள் வில்லன் வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பேட்ட, மாஸ்டர், விக்ரம் படங்களில் விஜய் சேதுபதி வில்லன் நடித்து வரவேற்பை பெற்றதால் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

   அதேபோன்று கதாநாயகிகளும் வில்லியாக நடிக்க விரும்புகிறார்கள். தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் திரிஷா நடித்து பெயர் பெற்றிருந்தார். பிரியாமணி இந்நிலையில் பிரியாமணியிடம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் புஷ்பா 2-ம் பாகம் படத்தில் வில்லியாக நடிக்க படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  புஷ்பா-2 படத்தில் விஜய்சேதுபதியை வில்லனாக நடிக்கவைக்க முயற்சி நடந்து வருகிறது. விஜய் சேதுபதிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணியை படக்குழு அணுகி உள்ளனர். அவருக்கும் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆர்வம் உள்ளதால் விரைவில் ஒப்புக் கொள்வார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: புஷ்பா-2 படத்தில் வில்லியாக களம் இறங்கும் பிரபல நடிகை! Rating: 5 Reviewed By: news
  Scroll to Top