அவுஸ்ரேலியா கிங் தீவில் கரை ஒதுங்கிய 12க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் ! - THAMILKINGDOM அவுஸ்ரேலியா கிங் தீவில் கரை ஒதுங்கிய 12க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் ! - THAMILKINGDOM

 • Latest News

  அவுஸ்ரேலியா கிங் தீவில் கரை ஒதுங்கிய 12க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் !

   


  அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14 இளம் ஸ்பர்ம் வகைத் திமிங்கிலங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.

  இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியமைக்கான காரணத்தை அவுஸ்ரேலிய வனவிலங்கு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

  வனவிலங்கு உயிரியலாளர்களும் கால்நடை மருத்துவர்களும் ஆய்வு செய்வதற்காக தீவுக்குச் சென்றுள்ள அதே நேரத்தில் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை ஊழியர்கள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.

  திமிங்கிலங்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பது அரிதான ஒன்று என்றும் இருப்பினும் இந்த வட்டாரத்தைப்  பொறுத்தவரை இது எதிர்பாராத சம்பவம் அல்ல என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அவுஸ்ரேலியா கிங் தீவில் கரை ஒதுங்கிய 12க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் ! Rating: 5 Reviewed By: news
  Scroll to Top