நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! - THAMILKINGDOM நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! - THAMILKINGDOM

  • Latest News

    நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

     


    நியூசிலாந்து நாட்டில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இன்று அதிகாலை அந்த நாட்டில் உள்ள கெர்மடெக் தீவுகளில் திடீரென சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உலுக்கியது. 

    இது ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளியாக பதிவானதாக நில நடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. நில நடுக்கம் ஏற்பட்ட கெர்மடெக் தீவுகளை சுற்றி 300 கிலோ மீட்டர் தூரத்தில் பொதுமக்கள் யாரும் வசிக்கவில்லை. 

    இதனால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் நாட்டிலும் இன்று நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! Rating: 5 Reviewed By: news
    Scroll to Top