பிரபல திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காதது குறித்து ஜி.வி.பிரகாஷ் காட்டம்! - THAMILKINGDOM பிரபல திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காதது குறித்து ஜி.வி.பிரகாஷ் காட்டம்! - THAMILKINGDOM

 • Latest News

  பிரபல திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காதது குறித்து ஜி.வி.பிரகாஷ் காட்டம்!

  சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கத்தில் ஒவ்வொரு படங்கள் வெளியாகும் பொழுதும் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வந்து படம் பார்த்து செல்வார்கள். குறிப்பாக திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்கள் ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்காக ரோகினி திரையரங்கிற்கு வருவார்கள். 

  இன்று ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். 

  இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.  படம் பார்க்க மறுத்த ஊழியர்கள் இந்நிலையில் இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதை தொடர்ந்து இதுகுறித்து இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் காட்டமாக பதிவிட்டுள்ளார். 

  அதில், அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது, எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என்று பதிவிட்டுள்ளார்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பிரபல திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காதது குறித்து ஜி.வி.பிரகாஷ் காட்டம்! Rating: 5 Reviewed By: news
  Scroll to Top