Breaking News

மருந்தாகும் மருதாணி


குழந்தையில் ஆரம்பித்து குமரிகள், கிழவிகள்
என அனைவரும் கையில் மருதாணி வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். மருதாணியை அழவணம், ஐவணம், மெகந்தி போன்ற பெயர்களில் அழைப்பார்கள். இந்த மருதாணியில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.மருதாணி இலையில் கிருமி நாசினி உள்ளது. கண்ணுக்கு தெரியாத பல கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தி உடையது. 

 * நகசுத்தி வராமல் தடுக்கும். 

 * கை, கால், விரல் நகங்களில் அரைத்து பூசி அழகூட்டுவார்கள். 

 * மருதாணி வேர்ப்பட்டையை அரைத்து காலில் ஆணி இருப்பவர்கள் காலில் போட்டு வந்தால் ஆணிகால் குணமாகும். 

 * ஆறாத வாய்ப்புண், அம்மைப்புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மை புண்களுக்கு பூசலாம் 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்து போடலாம்.