அமெரிக்க தூதரக அதிகாரிகள் மடக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுப்பிரதினிதிகள் சந்திப்பு - THAMILKINGDOM அமெரிக்க தூதரக அதிகாரிகள் மடக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுப்பிரதினிதிகள் சந்திப்பு - THAMILKINGDOM

 • Latest News

  அமெரிக்க தூதரக அதிகாரிகள் மடக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுப்பிரதினிதிகள் சந்திப்பு

  மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும்
  மதங்களுக்கிடையிலான பிணக்குகள் மற்றும் இணக்கப்பாட்டு விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று மடக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழு அமைப்பிற்கும், இலங்கை மற்றும் மாலை தீவிற்கான அமெரிக்க தூதரக அரசியல் துறை அதிகாரி தெரேசா டேல்லாச்சி ஆகியோருக்கிடையில் இன்று காலை 9 மணியளவில் ஓட்டமாவடி அமெரிக்கன் கல்லூரி கேட்போர் கூட மண்டபத்தில் இடெம்பெற்றது.

  இதன் போது மட்டக்களப்பில் யுத்தத்திற்கு முன்னர் மற்றும் பின்னர் இன முரன்பாடுகள் குறித்தும், யுத்தத்தினால் பாதிப்படைந்த பென்கள் மற்றும் முன்னாள் போராளிகள் வாழ்க்கை நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் வீ. கமலதாஸ், பொதுச் செயலாளர் எஸ்.எம். இஸ்ஸடீன், ஜுனைட் நளீமி ஆகியோரும் ஏனைய அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அமெரிக்க தூதரக அதிகாரிகள் மடக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுப்பிரதினிதிகள் சந்திப்பு Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top