மட்டக்களப்பில் மாவை எம்.பி.மயக்கமடைந்தார் தற்போது நல்ல நிலையில் உள்ளார் - THAMILKINGDOM மட்டக்களப்பில் மாவை எம்.பி.மயக்கமடைந்தார் தற்போது நல்ல நிலையில் உள்ளார் - THAMILKINGDOM

 • Latest News

  மட்டக்களப்பில் மாவை எம்.பி.மயக்கமடைந்தார் தற்போது நல்ல நிலையில் உள்ளார்

  மட்டக்களப்பு, கல்லடி துளசி மண்டபத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற
  “அனைத்துல சமூகமும் தமிழ் தேசிய அரசியலும் - ஒரு சமகால பார்வை” எனும் கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மயங்கி விழுந்து விட்டார்.
  சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் வடக்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சம்பங்கள் தொடர்பில் உணர்வுபூர்வமாக உரையாற்றிக்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மயங்கி சரிந்து வீழ்ந்த நிலைமையானது அங்கு கூடியிருந்த பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தின் பின்னர் அவர் பழைய நிலைக்கு திரும்பிய பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் பதற்றம் நீங்கியது.
  அனைத்துல சமூகமும் தமிழ்த் தேசிய அரசியலும் -ஒரு சமகால பார்வை- கருத்தாடல் நிகழ்வு
  தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையாக அனைத்துலக சமூகமும் தமிழ் தேசிய அரசியலும் ஒரு சமகால பார்வையென்ற தலைப்பில் நேற்று மட்டக்களப்பு கல்லடியில் கருத்தாடல் நிகழ்வு இடம்பெற்றது.
  நேற்று பிற்பகல் 3.00மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.
  இந்த கருத்தரங்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,சிரேஸ்ட சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
  இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் என பெருந்திரளானொர் கலந்துகொண்டனர்.
  இந்த நிலையில் இறுதியாக சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் வடக்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சம்பங்கள் தொடர்பில் உணர்வுபூர்வமாக உரையாற்றிக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மயங்கி சரிந்துவீழ்ந்த நிலைமையானது அங்கு கூடியிருந்த பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  தொடர்ந்து சிறிது நேரத்தின் பின்னர் பழைய நிலைக்கு திரும்பிய பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் பதற்றம் நீங்கியது.
  ஆதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைமைகள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிரேஸ்ட சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பதிலளித்தனர்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மட்டக்களப்பில் மாவை எம்.பி.மயக்கமடைந்தார் தற்போது நல்ல நிலையில் உள்ளார் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top