பாடசாலை மாணவர்களுக்கு முடிவெட்டும் இராணுவத்தினர்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில், காஞ்சிரங்குடா
பாடசாலையை சிகை அலங்கார நிலையமாக மாற்றியிருக்கிறது சிறிலங்கா இராணுவம்.
காஞ்சிரங்குடா பாடசாலைக்கு சென்ற, பெரியவெட்டுவானை தளமாக கொண்டியங்கும் சிறிலங்கா இராணுவத்தின் 232வது பிரிகேட்டைச் சேர்ந்த 12வது சிறிலங்கா தேசிய காவல்படையின் சிகை அலங்காரப் பிரிவு, அங்கு 20 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு பெற்றோரின் அனுமதியின்றி முடிவெட்டியுள்ளனர்.