இசைப்பிரியாவுக்கு அஞ்சலி
ஆதரவளிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மதுரையில் கூடிய ஆயிரக்கணக்கானோர் இலங்கைப் போரின்போது கொல்லப்பட்ட இசைப்பிரியாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நூற்றுக்கணக்கான பெண்கள் இதில் கலந்துகொண்டு உணர்ச்சியோடு மெழுகுவர்திகளை ஏற்றினார்கள். இசைப்பிரியா தொடர்பான பதாதைகளும், ஈழத்தில் கொல்லப்பட்ட மக்களின் பாதாதைகளையும் அவர்கள் கைகளின் ஏந்தி நின்ற காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
ஈழத் தமிழர்கள் அனுபவித்த இன்னல்களை சுமந்து, ஈழத் தமிழர்களுக்காக நாம் குரல்கொடுக்க இருக்கிறோம் என்று தமிழகத்தில் உள்ள உறவுகள் மீண்டும் ஒரு முறை உரக்கச் சொல்லியுள்ளார்கள்..














