ஒரே தேசம்!!! ONE NATION!!
நீங்கள் இலங்கையரோ? எண்டு ஆரும் கேட்டால்…
சிங்கள ஆக்கள் அடுத்த செகண்ட் ஓம் ஸ்ரீலங்கன் எண்டு சொல்லுவாங்கள்.. கொஞ்சமும் யோசிககமாட்டாங்கள். எங்கடை தமிழ்ஆக்கள்ள கொஞ்சப்பேர் இடம் பொருள் ஏவல் பார்த்து ஓம் எண்ட மாதிரியும் இல்லையெண்ட மாதிரியும் ஆட்டுவினம்.. சரி ஈழமோ எண்டு கேட்டாலும்… கனக்க யோசிச்சு மொக்குத்தனமா… அதே ரியாக்சன் தான் காட்டுவினம்… ஒரு சிலர் ஓம் ஸ்ரீலங்கன் எண்டு வெளிநாடுகள்ல சொல்லுவினம்.. ஈழம் எண்டும் அங்கை தான் சவாடால் அடிக்கிற.. இஞ்சை வந்தா… !!! சரி அதை விடுங்கோ .. நான் சொல்ல வந்ததும் அது இல்லை…
சிங்கள ஆக்கள் அடுத்த செகண்ட் ஓம் ஸ்ரீலங்கன் எண்டு சொல்லுவாங்கள்.. கொஞ்சமும் யோசிககமாட்டாங்கள். எங்கடை தமிழ்ஆக்கள்ள கொஞ்சப்பேர் இடம் பொருள் ஏவல் பார்த்து ஓம் எண்ட மாதிரியும் இல்லையெண்ட மாதிரியும் ஆட்டுவினம்.. சரி ஈழமோ எண்டு கேட்டாலும்… கனக்க யோசிச்சு மொக்குத்தனமா… அதே ரியாக்சன் தான் காட்டுவினம்… ஒரு சிலர் ஓம் ஸ்ரீலங்கன் எண்டு வெளிநாடுகள்ல சொல்லுவினம்.. ஈழம் எண்டும் அங்கை தான் சவாடால் அடிக்கிற.. இஞ்சை வந்தா… !!! சரி அதை விடுங்கோ .. நான் சொல்ல வந்ததும் அது இல்லை…
பொதுவா.. வடக்கு கிழக்கிலை கம்பஸ்
பெடிபெட்டையள் இலங்கையைப் பாக்கிறம் எண்ட பெயரிலை… காசை “தண்ணியா”
செலவழிக்க கிளம்புங்கள்.. ஸ்ரீலங்கா ரூர் இல்லை…. ஓல் சிலோன் ரூர் ( ALL
CEYLON TOUR) .. அதுவும் யாழ்ப்பாணத்து கம்பஸ் பெடியள் வெளிக்கிடுவினம்.
அவைக்கு யாழ்ப்பாணம் முழுசா தெரியுமோ எண்டு கேட்டா…. நீங்கள் அழைத்த நபர்
தொடர்பு எல்லைக்கு வெளியே… அதான்பா நோ ஆன்ஸர் ( NO ANSWER ) … ஹி ஹி ஹி….
இன்னமும் எலக்ரிசிட்டி போட்டிலையும் ( CEB) அரச பஸ்ஸிலையும் (CTB) எங்கடை
சனம் சிலோனை மறக்கேல்லை… அப்ப முந்தி ஈழம் தானே…. அதையும் மறக்காமை
பாவியுங்கோ பாப்பம்.
நான் இலங்கையனோ ஈழத்தவனோ.. தழிழீழத்தவனோ..
இலங்கைத் தமிழனோ… எனக்கு பெரிய குழப்பம்.. எப்பிடி சொல்லுற எண்டு
தெரியேல்லை… உலகப்படத்திலை… இந்தியாக்கு கீழை.. மாம்பழ வடிவிலை ( மாம்பழம்
வெட்டி வெட்டி குரங்கு அப்பம் பிரிச்ச கதையா போகப் போறது வேறை கதை.. )
இருக்குமே…. அந்த நிலப்பரப்புத் தான் என்ரை தாய்நிலம்.. இலங்கை எண்டு
குறிச்சிரிப்பினம்.. அதின்ரை நீள அகலங்களை… அகலாங்கு நெட்டாங்குகளை…
அளந்திருக்கிறீங்களோ…. எந்த மூலைக்கு போனாலும் நீங்கள் பொதுவா சில
விசயங்களைப் பாக்கலாம்….
1. மகா வித்தியாலயங்கள்… கலவன்
பாடசாலைகள்… ஆண்கள் ,பெண்கள் கல்லூரிகள்… மிஷனரிப் பள்ளிக்கூடங்கள்… (
பெரும்பான்மை மதம் சார்,இனம் சார் குறிப்பான்களோடை தான் இவை இருக்கும்..
இந்து தமிழ்க் கலவன் பாடசாலை… மெதடிஸ்த திருச்சகள்....முஸ்லிம் மகா
வித்தியாலயம்.. சிங்கள மகாவித்தியாலயம்…… ) ஆனா இலங்கை அரசாங்கத்தின்ரை ஒரே
ஒரு புண்ணிய செயல் இலவச கல்வி தான்.. பாடசாலை முதல் பல்கலை வரை..அதையும்
பக்கத்து வீட்டான் கெடுக்க வெளிக்கிடுறான் தனியார் கல்லூரிகள் எண்ட
பெயரிலை... )
2. வாசிகசாலை (நூலகம் ,சனசமூக நிலையம்,வாசகர் சாலை)
– ஊருக்கொரு வாசிகசாலை கட்டாயம் இருக்கும்.. அங்கை தினசரிப் பத்திரிகை
எண்டாலும் கட்டாயம் இருக்கும்.
3. வழிபாட்டிடம் - பொதுவா
வழிபாட்டிடத்தை வைச்சு அந்த பிரதேசத்தின்ரை பெரும்பான்மை குடியிருப்பு ஆர்
எண்டதைக் கண்டுபிடிக்கலாம். சிவனும் அவரது பரிவாரங்களும்… புத்தர்,அல்லா..
இயேசு என இலங்கையின்ரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொருத்தர் காவலாட்கள்..
ஆர் காவலாள் எண்டதை வைச்சு முந்தி கண்டுபிடிச்சம். அதல்லாம் (மு.மு) காலம்…
அதான்பா முள்ளிவாய்க்காலுக்கு முன்.. அந்தக்கணக்கின்படி இப்ப இலங்கைக்கு
வந்தியள் எண்டா…. அட.. முழு இலங்கையும் புத்த மதமோ எண்டு கேப்பியள்..
இலங்கையின்ரை ஏகபோக காவலாளி புத்தர் தான்… அதிலையும் வடக்கு கிழக்கிலை…
அரசமரங்கள் ஓண்டும் மிச்சமில்லை… மரங்கள்ள இருந்த வைரவர் காளி வீரபத்திரர்
எல்லாரும் சீனாக்கோ…. அமெரிக்காக்கோ புலம்பெயர்ந்திட்டினம் போலை.. ஒருவேளை
தந்திரோபாயப் பின்வாங்கலோ??!!!! என்ன கறுமமோ கடவுள்களும் கடத்தல்காரருக்கு
பயந்து குறுக்காலை போட்டினம் போலை. பிரித்தின்ரை (பிரித் ஓதுதல்) மகிமையோ
என்னவோ…
4. இது வடக்கு கிழக்கிற்கு மிகப் பரிச்சயமான… விசயம்… இராணுவ முகாம்களும் சோதனைச் சாவடிகளும்….
பள்ளிக்குடம்.. கோயில்.. நூலகம் போலை பிரதான விசயங்கள்ள ஒண்டா ஆர்மி
காம்ப் இருக்கும்.. தடுக்கி விழுந்தா கோயில்களும்… ஓடி விழுந்தா
சேர்ச்சுகளும்… மரதன் ஓடி விழுந்தா பள்ளிவாசலும் இருந்திச்சு… இண்டைக்கு..
கண்ணைச் சிமிட்டிட்டு நிமிர்ந்தா… ஒண்டில் புத்தரின் தரிசனம் கிடைக்கும்..
தப்பினா.. புத்தரின் புத்தான்ரை ( புத்தரின் மகன்) தரிசனம் கிடைக்கும்..
வெள்ளை வேட்டிக் கள்ளர் போலை வெள்ளைக் கலர் புத்தர்… அவர் ஏன் கண்ணை மூடி
இருக்கிறார் தெரியுமோ…. கண்டும் காணாமை இருக்கிறார் எண்டு குறியீட்டிலை
சொல்லுறாராம்..
ஓல் சிலோன் ரூர் எண்டு வெளிக்கிட்டு… அனுராதபுரம்
சிவன் கோவிலை தாண்டி… கண்டும் காணாமை… புத்தகாயாக்கள்லயும் தலதா
மாளிகையிலையும் போட்டோக்கு போஸ் குடுக்கிறவைக்கு ஒரு சின்ன அட்வைஸ்….
உங்கடை பிள்ளையள் புத்தரின் விஸ்வரூபங்களைப் பாக்கிறேக்கு தெற்கின்
நீளங்களை அளக்கவேண்டியிருக்காது. தெற்கிலையிருந்து யாழ்ப்பாணம் வருவினம்…(
அவைக்கு அரசாங்க காசும் கிடைக்கும்… ) நீங்களும் காசைக் கரியாக்காதேங்கோ…
இலங்கைல எந்த மூலைக்கு போனாலும் இந்த விசயங்களைத் தானே பாக்க போறியள்…
ஒரே தேசம்: ஒரே மொழி : ஒரே மதம் :.. இலங்கை….
(ஐயோ நாங்கள் இலங்கை இல்லையப்பா… ஈழம்…. தமிழர்… எண்டு ஆரெண்டாலும் சொல்ல
நினைக்கிறீங்களோ? தாராளமாச் சொல்லுங்கோ.. மகிந்தர் கேட்பார்… வரமாகிய
மோட்சமும் கிடைக்கும்… அதுக்கு புத்தரும் பொறுப்பில்லை… எங்கடை சித்தரும்
பொறுப்பில்லை )
-நித்யா-