Breaking News

மீண்டும் புதுப்பொலிவோடு வலம்வரும் Tamilkingdom


எதிர்பாராத விதமாக கைதுசெய்யப்பட்ட எமது பிரதான
செய்தியாளர் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் புதுப்பொலிவோடு இன்றிலிருந்து தனது பணியிணை Tamilkingdom இணையம் தொடரும்.

மேற்படி எமது இணையத்தள பிரதம ஆசிரியர் கடந்த மாதம் 25 ஆம் நாள் கைதுசெய்யப்பட்டு கடந்த 25 நாட்களாக தடுப்புகாவலில் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அதன்பொருட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்ட எமது இணையத்தள பணிகள் இன்றிலிருந்து புதிய உத்வேகத்துடன் இடம்பெறும் என்பதனை மனமகிழ்வுடன் அறியத்தருவதுடன், இதன் காரணமாக கடந்த 25 நாட்களாக தளத்திற்கு வருகைதந்து ஏமாற்றமடைந்த வாசக உள்ளங்களிடம் எமது தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.