Breaking News

இந்திய தலைநகரில் தேசியத்தலைவரின் படத்துடன் சீக்கியர்களுடன் நாம்தமிழர் பேரணி(காணொளி)


இனப்படுகொலைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும்
உள்ளாக்கப்பட்ட இந்தியாவின் பிரதான தேசிய இனங்களான சீக்கியர்கள்,காஷ்மீரியர்கள், நாகர்கள், தமிழர்கள் பங்குபெறும் நீதி உரிமை பேரணி டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழர்கள் சார்பாக பங்குபெற நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு வழங்கப்பட்டதையடுத்து தமிழகத்திலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட கட்சி உறுப்பினர்களுடன் பேரணி மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. 
சீக்கிய இனப்படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தினை நினைவேந்தும் முகமாக இந்நிகழ்வு இந்திய தலைநகர் டெல்லியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தோழர்களுடன் சீக்கிய இன சகோதரர்களும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் உருவப்படத்தினை தாங்கி பேரணியில் சென்றதை பல்லாயிரக்கணக்கான பிற மாநில மக்கள் பார்த்து வியப்படைந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.











நன்றி-காணொளி,படஉதவி-கி.உதயகுமார்,நல்லதம்பி