Breaking News

மகிந்தவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் 22ம் திகதி வெளியிடப்படும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் எதிர்வரும் 22ம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது.


மஹிந்த சிந்தனை முக்கால நோக்கு என்ற தொனிப் பொருளில் இம்முறை கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் முற்பகல் 11 மணியளவில் தேர்தல் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.பௌத்த மாநாயக்க தேரர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

2005ம் ஆண்டில் மஹிந்த சிந்தனை, 2010ம் ஆணடில் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு இம்முறை 2015ம் ஆண்டில் மஹிந்த சிந்தனை முக்கால நோக்கு என்ற அடிப்படையில் கொள்கைப் பிரடகனம் வெளியிடப்பட உள்ளது.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று விகாரமகாதேவி பூங்காவில் வைத்து தனது தேர்தல் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.