மைத்திரிக்கு 45 விசேட அதிரடிப்படை வீரர்களின் பாதுகாப்பு-மகிந்த தேசப்பிரிய
எதிரணி ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு 45 விசேட அதிரடிப்படை வீரர்களின் பாதுகாப்பை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.
உதவி பொலிஸ் அதிகாரி காமினி நவரட்ணவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த உத்தரவு எழுத்துமூலம் இன்னும் கிடைக்கவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பொதுவேட்பாளரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.தேர்தல் சட்டப்படி வேட்பாளர்களுக்கு ஒரேவிதமான பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்.எனினும் மைத்திரிபாலவுக்கு தற்போது 5 விசேட அதிரடிப்படைவீரர்களே பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.








