மகிந்தவின் சினிமா பிரச்சாரம் ஆரம்பம் சல்மான் கான் இலங்கை வந்தடைந்தார் - THAMILKINGDOM மகிந்தவின் சினிமா பிரச்சாரம் ஆரம்பம் சல்மான் கான் இலங்கை வந்தடைந்தார் - THAMILKINGDOM
 • Latest News

  மகிந்தவின் சினிமா பிரச்சாரம் ஆரம்பம் சல்மான் கான் இலங்கை வந்தடைந்தார்


  ஜனாதிபதித் தேர்தலுக்கு 9 நாட்களே எஞ்சியுள்ள நிலையில்
  பொலிவுட் நடிகர் சல்மான் கான் இலங்கை வந்தடைந்துள்ளார். இன்று அதிகாலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

  அவருடன் பொலிவுட் நடிகை ஜெக்குலின் பெர்ணான்டஸ் மற்றும் பொலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இலங்கை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

  இதற்கு முன்னரும் பலதடவை சல்மான் கான் இலங்கைக்கு வந்துள்ள போதிலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அவரது விஜயம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
  இதேவேளை சல்மான் கான் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மகிந்தவின் சினிமா பிரச்சாரம் ஆரம்பம் சல்மான் கான் இலங்கை வந்தடைந்தார் Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top