வடக்கில் இருந்து இராணுவத்தை குறைக்கமாட்டேன் – மகிந்த
வடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினரைக் குறைக்க மாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
நேற்று மாலை ருவன்வெல்லவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,‘’ஐரோப்பிய நாடுகளோ அல்லது வேறு எந்த நாடுகளோ கோரினாலும் கூட வடக்கில் இருந்து படையினரைக் குறைக்க மாட்டேன்.
வடக்கில் உள்ள படையினரின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும்படி அவர்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர்.ஆனால் அதைச் செய்வதற்கு நானும் எனது அரசாங்கமும் மறுத்து வருகிறோம்.
வடக்கில் இராணுவம் முக்கிய பங்காற்றி வருகிறது.வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால், நாட்டைப் பிரிக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








