ஆண்டினை தோல்வியுடன் நிறைவு செய்த இலங்கை அணி - THAMILKINGDOM ஆண்டினை தோல்வியுடன் நிறைவு செய்த இலங்கை அணி - THAMILKINGDOM
 • Latest News

  ஆண்டினை தோல்வியுடன் நிறைவு செய்த இலங்கை அணி

  நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது ​டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது இலங்கை அணி. பொக்ஸிங் தின போட்டியாக ஆரம்பித்த இபபோட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி மெக்கலத்தின் அதிரடியான 195 ஓட்டத்தின் உதவியுடன் 441 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.


  பதிலுக்கு தனது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. தொடர்ந்து தனது பலோ ஒன்னில் இரண்டாம் இனிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுக்களை இழந்து 293 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திமுத் கருணாரத்ன தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவர் முதல் இனிங்சில் ஓட்டம் ஏதும் பெறாது ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

  இன்றைய நான்காம் நாள் ஆட்டம் தொடர்ந்த போது மேலதிகமாக 34 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய இல்கை 407 ஓட்டங்களை மொத்தமாக பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அணித்தலைவர் மெத்யூஸ் 65 ஓட்டங்களையும் பந்து வீச்சாளரான ஏரங்க ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

  வெற்றி இலக்கான 105 ஓட்டங்களை நோக்கி தமது இரண்டாம் இனிங்​ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணியினர் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர்.

  இந்த போட்டியில் சங்கக்கார முறையே 6 மற்றும் 1 ஓட்டப் பெறுதிகளையே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்ட நாயகனாக மெக்கலம் தெரிவு செய்யப்பட்டார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஆண்டினை தோல்வியுடன் நிறைவு செய்த இலங்கை அணி Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top