Breaking News

மைத்திரி புகையிலை நிறுவனத்திடம் பணம் பெற்றார் - மகிந்த

முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன புகையிலை நிறுவனத்திடம் பணத்தை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்து அனுப்பிய கடிதம் சம்பந்தமான அறிக்கை தன்னிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பதுளை – ஹாலி-எல பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த சிந்தனை மூலம் மதுவுக்கு முற்றுபுள்ளி வைக்க இன்றைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.பஸ்களில் புகைத்தல், பொது இடங்களில் சிகரெட் விற்பனை தடை செய்யப்பட்டதுடன் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டது.

முன்னாள் சுகாதார அமைச்சர் சிகரெட் பக்கெட்டுகளில் புகைத்தல் எச்சரிக்கை தொடர்பான புகைப்படத்தை 80 வீதமாக அச்சிடுமாறு உத்தரவிட்டார். அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், நீதிமன்றத்திற்கு செல்லும் உரிமை நிறுவனத்திற்கு இருப்பதால், நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது.நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கொண்டு அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது தவறானது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.