புகையிரதக் கடவைகள் இன்மையால் மக்கள் சிரமம் - THAMILKINGDOM புகையிரதக் கடவைகள் இன்மையால் மக்கள் சிரமம் - THAMILKINGDOM
 • Latest News

  புகையிரதக் கடவைகள் இன்மையால் மக்கள் சிரமம்

  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முக்கியமான புகையிரத வீதிகள் சிலவற்றுக்கு புகையிரத பாதுகாப்பு கடவைகள் போடப்படாமையால் சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


  இதனால் புகையிரத வீதியை கடக்கும் மக்கள் புகையிரதம் மோதி மரணத்தை தழுவும் சம்பவங்களும் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் மேலும் முக்கிய வீதிகளுக்கு பாதுகாப்பு கடவைகளை சம்பந்தப்பட்டோர் ஏற்படுத்தித்தருதுமாறு பொது அமைப்புக்களும் பொது மக்களும் கோரியுள்ளனர்.

  குறிப்பாக அதிகளவானோர் புகையிரத வீதியை கடக்கும் முறிகண்டி பொன்னகர் வீதிக்கு பாதுகாப்பு கடவையை  ஏற்படுத்தித்தருமாறு இப்பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் இவ்வீதியை கடக்கமுற்பட்ட பொன்னகர் வாசி ஒருவர் கடுகதி ரயில் மோதி மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: புகையிரதக் கடவைகள் இன்மையால் மக்கள் சிரமம் Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top