போர்க்குற்றம் தொடர்பில் பேச அரசுக்கு அதிகாரம் இல்லை - சம்பிக்க
மக்ஸவெல் பரணகம ஆணைக்குழுவுக்கு போர்க்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை நடத்த அதிகாரம் வழங்கிய நிலையில் அரசாங்கத்துக்கு போர்க்குற்றம் தொடர்பில் பேச அதிகாரம் இல்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளர் பாட்டலி சம்பிக்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.ஜனாதிபதியும் அரசாங்கமும் படையினரை தனிமைப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் காட்டிக் கொடுத்துள்ளது என்றும் ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
பரணகமவின் குழுவுக்கு சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் இணைக்கப்பட்டமையானது, அதனை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தியமைக்கு சமனாகும்.மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரை, போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகள் நடத்தப்படும்.
இதன்போது குற்றம் நிரூபிக்கப்படுமானால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.








