உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றமுடியாது - மகிந்த - THAMILKINGDOM உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றமுடியாது - மகிந்த - THAMILKINGDOM
 • Latest News

  உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றமுடியாது - மகிந்த

  வடக்கில் தற்போது காணப்படும்  உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  


  மக்கள் பேஸ்புக் போலிப் பரப்புரைக்கு ஏமாந்துவிடக் கூடாது. பேஸ்புக் சமூக வலையத்தளத்தின் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது.    வெறுமனே மாற்றம் அவசியம் தேவை என்பதனை விடவும் எதற்காக மாற்றம் தேவை என்பது முக்கியமானது. 

   முன்னாள் லிபிய அதிபர் முஹம்மர் கடாபிக்கு நேர்ந்ததே தமக்கும் நேரும் என சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். இலங்கை மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் எவராலும் என்னைத் தோற்கடிக்க முடியாது.   நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி யுத்தம் முடிவுறுத்தப்பட்டது. அதனையே நாட்டு மக்களும் விரும்பினர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

  வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்குமாறு சில தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர். தேசிய பாதுகாப்பு காரணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது.  ஹம்பாந்தோட்டையிலும், கொழும்பிலும் உயர் பாதுகாப்பு வலயங்கள் காணப்படுகின்றன.  

  வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை மட்டும் எவ்வாறு அகற்றுவது. நாட்டை பிளவுபடுத்தவோ அல்லது தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் நெகிழ்வுத்தன்மையைக் காட்டவோ இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றமுடியாது - மகிந்த Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top