Breaking News

கிளிநொச்சியில் தொற்று நோய் அபாயம்

கிளிநொச்சி அக்கராயன்குளத்தில் வான் கதவுகள் திறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி மாவட்டத்தில் 2 வது பெரிய குளமாகிய அக்கராயன் குளத்தில் 24 அடி 3.5 அங்குலம் நீர்மட்டம் உள்ள நிலையில் நீர்  வெளியேறிக் கொண்டிருப்பததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்கராயன் குளத்தின் நீர் வெளியேறுவதால் சமாதானபுரம் வயல் நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.

அத்துடன், கண்ணகைபுரம் தாழ் நிலப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுதன் காரணமாக பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, கிளிநொச்சி பொதுச் சந்தைக்கருகில் நீண்டகாலமாக தேங்கிநிற்கும் மழைவெள்ளம் காரணமாக தொற்றுநொய்கள் ஏற்படக்கூடிய அபாயநிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரூந்துப் பாதை உயர்வாக அமைக்கப்பட்டதன் காரணமாக திருமுருகண்டி தொடக்கம் பரந்தன் உமையாள்புரம் வரை ஏ-9 சாலைக்கும் தொடரூந்துப் பாதைக்குமிடையிலான பகுதி மழைவெள்ளம் தேங்கி நிற்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக டெங்கு போன்ற தொற்று நோய்கள் உருவாகக்கூடிய நிலைமை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது