Breaking News

மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும்!அமெரிக்கா, இந்தியா வேண்டுகோள்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துமாறு அமெரிக்காவும் இந்தியாவும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தலுக்கான சூழலை இல்லாமல் செய்யாது அதனை பாதுகாக்க உரிய முனைப்புகளை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் இந்த ராஜதந்திர வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

புதுடெல்லியில் இருந்து கிடைத்த செய்தியை இந்திய உயர்ஸ்தானிகர் அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கு அறிய தந்துள்ளார். அமெரிக்க அரசின் செய்தியை அந்த நாட்டு தூதுவர் அரசாங்கத்தின் உயர் செயலாளர் ஒருவரிடம் வழங்கியுள்ளார்.

குறிப்பாக வடக்கு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க அர்ப்பணிப்புகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ராஜதந்திர தரப்புகள் தெரிவிக்கின்றன. நட்புறவு ரீதியான ராஜதந்திர செய்தியாக இந்நாடுகள் தமது இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளன.