48 தூதுவர்களின் பதவிக்கு ஆபத்து
வெளிநாடுகளுக்கு அரசியல் ரீதியாக நியமனம் பெற்றுள்ள 48 தூதுவர்களை எதிர்வரும் மாதம் பதவி நீக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
.
அரசியல் நியமனம் பெற்ற இந்தத் தூதுவர்கள் புலம்பெயர் அமைப்புகளுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அமைச்சர்களின் புதல்வர்கள் அல்லது புதல்விகள் அடங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனையடுத்து புதிய தூதுவா்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.








