ஜனாதிபதி மைத்திரிபால இந்தியாவுக்கு விஜயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்ட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் முதலில் இந்தியாவுக்கு அவர் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் இந்திய பயணத்தை உறுதி செய்யும் விதமாக, “மோடி எங்கள் ஜனாதிபதியை இந்தியாவுக்கு முதலில் வருகை தருமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து அடுத்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்” என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.








