ஜப்பானிய பிணைக்கைதிகளை தலைத் துண்டித்து கொல்வோம் - ஐ.எஸ் (காணொளி)
ஜப்பானை சேர்ந்த இருவர்களை தலைத் துண்டித்து கொல்லப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் வீடியோ ஒன்றில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல நாட்டினரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து தலைத் துண்டித்து கொலை செய்து வருகின்றது.
இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த இரு நபர்களை பிணைக் கைதிகளாய் பிடித்து வைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ், தற்போது அவர்களை கொல்லப் போவதாக வீடியோ ஒன்றில் மிரட்டியுள்ளது.
இது தொடர்பாக இன்று தீவிரவாதிகள் வெளியிட்ட வீடியோவில், காவி நிற உடைகளுடன் இரு ஜப்பானியர்களும் மண்டியிட்டபடி உள்ளனர்.அவர்களின் நடுவே நிற்கும் தீவிரவாதி பேசியதாவது, இப்போதைக்கு எங்களால் எதுவும் செல்ல முடியாது.
இன்னும் 72 மணி நேரத்திற்குள் இந்த இருவர்களுக்கும் சேர்த்து மொத்த தொகையான 200 மில்லியன் டொலர்களை ஜப்பானிய அரசாங்கம் எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் இல்லையேல் இவர்களை தலைத் துண்டித்து கொடூரமாக படுகொலை செய்வோம் எனவும் மிரட்டியுள்ளான் .பிணைக்கைதிகளை உடனடியான விடுவிக்க வேண்டும்: ஜப்பான் பிரதமர் திட்டவட்டம்
ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் பிணைக்கைதிகளாய் சிக்கியுள்ள இரண்டு ஜப்பானியர்களையும் விடுவிக்க வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஷின்ஸோ அபே வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பானை சேர்ந்த இரு நபர்களை பிணைக் கைதிகளாய் பிடித்து வைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ், இன்னும் 72 மணி நேரத்துக்குள் தங்களுக்கு ஜப்பானிய அரசு 200 மில்லியன் டொலர்களை கொல்ல வேண்டும் என்றும் இல்லையேல் அவர்களை தலைத் துண்டித்து கொல்லப் போவதாக வீடியோ ஒன்றில் மிரட்டியுள்ளது.
இது தொடர்பாக ஜெருசேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே(Shinzo Abe) செய்தியாளர்களிடம் பேசியதாவது, அவர்கள் இருவரும் பாதிக்கப்படக் கூடாது என்றும் எனவே அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நான் உறுதியாக வலியுறுத்துகிறேன் எனவும் பேசியுள்ளார்.
மேலும் இது போன்ற நடவடிக்கைகள் என்னை மிகவும் கோபம் அடைய செய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.








