அடுத்தடுத்து வெளியாகும் மகிந்தவின் பொக்கிசங்கள்(காணொளி)
மண்டப வளாகத்தில் (BMICH) சீல் வைக்கப்பட்டிருந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான ஆயுத களஞ்சியசாலையில் இருந்து 151 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த களஞ்சியசாலையில் ரி 56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட 3,473 துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு அரச பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த களஞ்சியசாலையில் இருந்து 3,322 துப்பாக்கிகள் பல்வேறு கடமைகளுக்காக விநியோகிக்கப்பட்டுள்ளதென குறித்த பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிகள் விநியோகிக்கப்பட்டுள்ள விதம் மற்றும் விநியோகிக்கப்பட்ட தோட்டாக்களின் எண்ணிக்கை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த தேடுதல் உத்தரவிற்கு அமைய குறித்த ஆயுத களஞ்சியசாலை இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது குறித்த இடத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் உதவிச் செயலாளர் சமன் திசாநாயக்கவும் சென்றிருந்தார்.
காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலிலிருந்து 3000ற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு
காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள ” மகநுவர” என்ற கப்பலில் இருக்கும் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையில் இருந்து பல்வேறு ரகங்களைச் சேர்ந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிறுவனத்தின் அதிகாரி வாக்குறுதியளித்தவாறு இன்று பிற்பகல் அதன் உயர் அதிகாரி ஒருவர் நியூஸ் பெஸ்ட்டுக்கு கருத்து வெளியிட்டார். இந்த தெளிவுபடுத்தலுக்கு அமைய முன்னாள் கடற்படை தளபதிகள் மூவர் இந்த நிறுவனத்தின் ஆலோசகர்களாக செயற்படுகின்றனர். இதேவேளை, தமது மேற்பார்வையின் கீழ் இந்த ஆயுதக்களஞ்சியசாலை நடத்திச் செல்லப்பட்டதாக கடற்படையும் உறுதிப்படுத்தியது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் பின்னர் கருத்து வெளியிட முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பி.எம்.யூ.டி.பஸ்நாயக்க நியூஸ் பெஸ்ட்டுக்குத் தெரிவித்தார்.

எவன்ட், கார்ட், சீக்கீயூரிட்டி சேர்விஸஸ், என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு இந்த ஆயுத களஞ்சியசாலைக்காக 2012 ஆம் ஆண்டு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நியூஸ் பெஸ்ட் குழு இது குறித்து விடயங்களை அறிவதற்காக குறித்த நிறுவனத்தின் பிட்டகோட்டேயிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்றது.
நிறுவனத்தின் அதிகாரி வாக்குறுதியளித்தவாறு இன்று பிற்பகல் அதன் உயர் அதிகாரி ஒருவர் நியூஸ் பெஸ்ட்டுக்கு கருத்து வெளியிட்டார். இந்த தெளிவுபடுத்தலுக்கு அமைய முன்னாள் கடற்படை தளபதிகள் மூவர் இந்த நிறுவனத்தின் ஆலோசகர்களாக செயற்படுகின்றனர். இதேவேளை, தமது மேற்பார்வையின் கீழ் இந்த ஆயுதக்களஞ்சியசாலை நடத்திச் செல்லப்பட்டதாக கடற்படையும் உறுதிப்படுத்தியது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் பின்னர் கருத்து வெளியிட முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பி.எம்.யூ.டி.பஸ்நாயக்க நியூஸ் பெஸ்ட்டுக்குத் தெரிவித்தார்.
கோட்டாபயவின் வங்கிக்கணக்கில் 8 பில்லியன் ரூபா: விசாரணைகள் தொடர்கிறது என்கிறார் ரவி
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் வங்கிக்கணக்கில் மக்களின் பணம் வைப்பிலிடப்பட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்காலத்தில் தகவல்களை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் இலங்கை வங்கியின் தெப்ரபேன் கிளையில் நடத்திச் செல்லப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்த சுமார் 8 பில்லியன் ரூபாவை திரைசேரியின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் தெரிவித்தார்.
அத்துடன், நிதியமைச்சின் பணத்தை வேறு இடங்களில் வைக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
காலி முகத்திடலில் இராணுவ தலைமையகம் அமைந்திருந்த காணியை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணம் குறித்த வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டிருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நேற்று (19) விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்தப் பணம் பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புதிய இராணுவத் தலைமையகத்திற்காக பயன்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த வங்கிக்கணக்கை ஆரம்பிப்பதற்காக அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.
.jpg)