Breaking News

வெலிக்கடை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட ஆணைக்குழு

வெலிக்கடையில் கைதிகள் கொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்த விசேட ஆணைக்குழுவொன்று நிறுவப்பட உள்ளது.


கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆணைக்குழு ஒன்றை நிறுவியிருந்தார். எனினும் அந்த விசாரணைக் குழு, சம்பவம் தொடர்பில் சரியான விசாரணைகளை நடத்தவில்லை என மனித உரிமை அமைப்புக்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சுமத்தியிருந்தன.

இதன் அடிப்படையில் தற்போது புதிய விசாரணைக்குழுவொன்றை அரசாங்கம் நிறுவியுள்ளது.உயர் நீதிமன்ற நீதவான் விமல் நம்புவசம் இந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசோக விஜயதிலக்க, ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி சட்டத்தரணி கே.எஸ்.லியனகே ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.சம்பவத்தில் 30 கைதிகள் வரையில் கொல்லப்பட்டதுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.