சமையல் எரிவாயு விலையும் விரைவில் குறைக்கப்படும்
எதிர்வரும் நான்கு நாட்களுக்குள், சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமது அமைச்சின் கீழுள்ள நுகர்வோர் சேவை அதிகார சபைக்கு, புதிய உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட் கிழமை பிரதமரினால் நியமிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, சமையல் எரிவாயு நிறுவனத்துடன் கலந்துரையாடி, சமையல் எரிவாயுவின் விலையை குறைப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என உணவு பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் பின்னர், உரிய பயனை நுகர்வோரான மக்கள் பெறுகின்றரா? என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








