Breaking News

புதிய இராணுவத் தளபதியாக மகேஸ் சேனாநாயக்க நியமனம்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக மகேஸ் சேனாநாயக்க நியமிக்கப்பட உள்ளார்.

இராணுவ சேவையிலிருந்து கட்டாய ஓய்வு வழங்கிய மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இவ்வாறு புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட உள்ளார்.அரசியல் காரணங்களுக்காக கடந்த அரசாங்கம் மேஜர் ஜெனரல் மகேஸ் பெரேராவிற்கு கட்டாய விடுமுறை வழங்கியிருந்தது.போரின் பல்வேறு கட்டங்களில் பங்களிப்புச் செய்த மேஜர் ஜெனரல் மகேஸ், டுபாய் சென்று விமான நிறுவனமொன்றில் கடமையாற்றி வந்தார்.

மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவுடன் சுமார் 20 உயர் இராணுவ அதிகாரிகளை, கட்டாய அடிப்படையில் கடந்த அரசாங்கம் ஓய்வு வழங்கியிருந்தது.ஓய்வுறுத்தப்பட்ட போது மகேஸ் சேனாநாயக்க இராணுவத்தின் சேவை மூப்பு அடிப்படையில் சிரேஸ்ட அதிகாரியாக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.