Breaking News

தேர்தல் தினத்தன்று இராணுவ நகர்வை மஹிந்த மேற்கொண்டார் - பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கடந்த தேர்தலுக்கு அடுத்த நாள் கொழும்பில் சுமார் 2000 படையினரை தயார்நிலைப்படுத்தினார் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். 


இராணுவப்புரட்சிக்காகவே இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவின் என்டிடிவிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், வடக்கில் இருந்து அழைக்கப்பட்ட படையினரை கொண்டே இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படிகொழும்பை சுற்றி இரண்டு வட்டங்களாக இராணுவத்தினர் நகர்த்தப்பட்டனர்.அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் உட்பட்ட கொழும்பு நகரப் பிரதேசத்திலும் தேர்தல்கள் ஆணையகத்தை உள்ளடக்கிய பிரதேசம் என்பவற்றிலேயே இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.