மனுஸ் தீவில் பதற்றம் (புகைப்படங்கள்)
புகலிடக் கோரிக்கையாளர்களை தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளதை கண்டித்து 300 பேருக்கும் அதிகமானோர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இதன் காரணமாக 20 தொடக்கம் 30 பேர் வரை தங்களது உதடுகளை தைத்தும் பலத்த எதிர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் காவலதிகாரிகளுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பதற்ற நிலை காரணமாக பலர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது முகாமிற்குள் பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக அகதிகள் செயற்பாட்டாளர் இயன் ரிண்டோல் தெரிவித்துள்ளார்.













