Breaking News

டக்ளஸின் இடத்திற்கு விஜயகலா நியமனம்

புதிய அமைச்சரவையில் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின் போது இணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று நம்பகரமாகத் தெரியவருகிறது.


இதுவரை காலமும் இணைத்தலைவராகப் பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பதவியைத் தொடர முடியாத நிலையில் அந்தப் பதவியை பிரதி அமைச்சர் விஜயகலாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த பொதுத் தேர்தல் வரையான காலப்பகுதி வரை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன், பிரதி அமைச்சர் விஜயகலாவும் இணைத்தலைவராகச் செயற்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.