வெலிகடை படுகொலை சாட்சியங்கள் உள்ளன - உந்துல் பிரேமரட்ன (படங்கள் இணைப்பு)
இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெலிகடை சிறைச்சாலையில் நடந்த கைதிகளின் போராட்டத்திற்கு சிறையதிகாரிகள் தீர்வு கண்ட நிலையில் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் பல கைதிகளை சுட்டுக்கொலை செய்தனர்.
முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட இந்த திட்டமிட்ட கொலை தொடர்பான சாட்சியங்கள் இருப்பதாக சட்டத்தரணி உந்துல் பிரேமரட்ன தெரிவித்தார்.நாட்டின் இன்றைய அரசாங்கம் இந்த படுகொலை குறித்து நியாயமான விசாரணைகளை நடத்த குழுவொன்றை நியமித்தால், சாட்சியங்களை முன்வைக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.














