எரிபொருள்களின் விலைகள் குறையும் - சம்பிக்க
எரிபொருள்களின் விலைகள் விரைவில் குறைக்கப்படும்.அவற்றுடன் வரிவிதிப்புக்கள் எவையும் இனிவருங் காலங்களில் உள்ளடக்கப்படமாட்டாது. என்று மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நேற்றுக் கண்டிக்கு சென்ற அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளது.கடந்த அரசு எண்ணெய் இறக்குமதி தொடர்பில் ஒப்பந்தம் செய்துள்ளது.
கூடிய பெறுமதிக்கே அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். எமது புதிய அரசு வாக்குறுதியளித்தபடி எரிபொருளின் விலையைக் குறைக்கும்.அத்துடன் இனிவருங்காலங்களில் எரிபொருள்களுக்கான விலைக்குரிய முறைமை ஒன்று பின்பற்றப்படும்.அது மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். எனவே எதிர்காலத்தில் மக்கள் எரிபொருள்களுக்காக பணம் செலுத்தும்போது, அது என்ன விடயங்களுக்காக செலுத்தப்படுகின்றது. என்பது தெரிய வரும் என்று அவர் தெரிவித்தார்.








