எஞ்சியது மகிந்தவின் கட்அவுட் மாத்திரமே - ரணில்
அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் என எண்ணியதாகவும் ஜனாதிபதியும் தானும் தமது கட்அவுட்களையும் சுவரொட்டிகளையும் அகற்றுமாறு உத்தரவிட்டதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெனியாய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தற்போது ஜனாதிபதியின் முகத்தை எனது முகத்தையும் கட்அவுட்களிலும் சுவரொட்டிகளிலும் காணமுடியாது.
அவற்றில் மகிந்த ராஜபக்ஷவின் முகத்தை மாத்திரமே காண முடியும். அவரது கட்அவுட்களையும் சுவரொட்டிகளையும் அகற்ற வேண்டாம் என்று கூறினோம். அவை இருந்தால் அனைவருக்கும் மிகவும் நல்லது.
நாங்கள் புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி செல்கிறோம். நாங்கள் அதனை நோக்கி செல்வது மக்களின் வெற்றியாகும். நாங்கள் மக்களுக்கு சேவைகளையே செய்கிறோம் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்த சேவையை முழு நாட்டுக்கும் கொண்டு செல்ல வேண்டும். இலங்கையின் இளைஞர், யுவதிகளும் எதிர்காலம் இருக்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.








