Breaking News

நாடாளுமன்றத்தில் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஆசனம் இல்லை

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிததரப்பில் தமக்கு ஆசனம் ஒதுக்கப்படாமை காரணமாக ஆளும் கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று நாடாளுமன்றத்துக்கு சமுகம் தரவில்லை.


அவருக்கான ஆசனம் சபை முதல்வரின் பட்டியல்படியே ஒதுக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் அறிவித்திருந்தார்.எனினும் அத்தநாயக்கவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.இதனையடுத்து அத்தநாயக்க அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

பின்னர் சபாநாயகரிடம் இது முறையில் முறையிட்டுள்ளார்.. சபாநாயகரும் மீண்டும் நாடாளுமன்ற செயலாளருக்கே அதனை பாரப்படுத்தினார். இந்தநிலையில் ஆசன பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னரே அவர் மீண்டும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றார்.